
சமூக சீரழிவுகள் அதிகரித்து சிறு பிள்ளைகளும் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
நாரேஹன்பிட்டியவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அதேவேளை போதைப் பொருள் மலிந்து விட்டமை சமூக சீரழிவுக்குக் காரணம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், போதைப் பொருள் வர்த்தகம், கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் நடவடிக்கைக்கு எதிராகவும் மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment