
ஹுதி கிளர்ச்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதல் ஒன்றினால் சவதி அரேபியா, ஜிசான் பிரதேசத்தில் ஐந்து வயது குழந்தையொன்று காயமுற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவ்வப்போது இப்பிரதேசம் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை வானில் வைத்தே முறியடித்து வந்த நிலையில் நேற்றைய தினம் வீடொன்றின் மீது வீழ்ந்த ரொக்கட்டினால் ஐந்து வயது குழந்தை காயமுற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானிய ஆயுதங்களைக் கொண்டே சவுதி மீது தாக்குதல் நடாத்தப்பட்டு வருவதாக சவுதி அரசு குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment