
நீண்ட இழுபறிக்குப் பின் உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெற்று அரசாங்கம் பாரிய தோல்வியைக் கண்ட நிலையில் தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறுமா என சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் தாமதமாவதற்குத் தாம் காரணமில்லையெனவும் தேர்தல் முறைமை பற்றி அரசியல் கட்சிகளிடம் இணக்கப்பாடில்லாததே காரணம் எனவும் தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
ஒரு சில அரசியல் கட்சிகள் பழைய முறைமையை விரும்புகின்ற போதிலும் மேலும் சில கட்சித் தலைவர்கள் தமது முடிவை இன்னும் அறிவிக்கவில்லையெனவும் ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment