
மஹிந்த ராஜபக்சவுக்கு சீன அரசு தேர்தல் செலவுக்கு நிதி வழங்கியது எனும் தகவலடங்கிய நியுயோர்க் டைம்ஸ் கட்டுரையின் பின்னணியில் மங்கள வசமரவீர இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளது கூட்டு எதிர்க்கட்சி.
மஹிந்தவிடம் ட்ரில்லியன்களில் பணம் இருப்பதாக தகவல் வெளியிட்டிருந்ததும் மங்களவே என்பதோடு குறித்த பத்திரிகை தகவலைப் பெரிது படுத்துவதிலும் முனைப்பு காட்டி வருவதாகவும் கூட்டு எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேவேளை இலங்கை, மியன்மார் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் நல்லாட்சியை உருவாக்க அமெரிக்கா 585 மில்லியன் டொலரை செலவிட்டுள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் யாரும் ஏன் கவனம் செலுத்துவதில்லையெனவும் கூட்டு எதிர்க்கட்சி வினவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment