கடந்த வருடம் மருதானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றின் பின்னணியில் தேடப்பட்டு வந்த லொக்கா என அறியப்படும் 29 வயது நபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ரவி சஞ்சீவ எனும் குறித்த நபர் மத்திய கொழும்பைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஓகஸ்ட் 29ம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் மூவர் காயமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment