மஹிந்தவுக்கு எதிரான விசாரணையைத் தடுத்த மகேந்திரன்! - sonakar.com

Post Top Ad

Sunday, 22 July 2018

demo-image

மஹிந்தவுக்கு எதிரான விசாரணையைத் தடுத்த மகேந்திரன்!

qUnuJIy

ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்தவின் உத்தரவின் பேரில் அவசர அவசரமாக மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் காசோலைகள் தொடர்பான விசாரணைகளை அப்போதைய மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் தடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



கூட்டாட்சி அரசு பதவியேற்றதும் 2014 இறுதி முதல் 2015 ஜனவரி 8ம் திகதி வரை பெருந்தொகை அரச நிதி இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவித்து அவை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில், அப்போதைய மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் விசாரணைகளை தடுத்திருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ள அதேவேளை மத்திய வங்கியில் பெருமளவு பிணை முறி மோசடியில் அர்ஜுன் மகேந்திரனும் தற்போது தேடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment