அட்டாளைச்சேனையில் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம் - sonakar.com

Post Top Ad

Friday 6 July 2018

அட்டாளைச்சேனையில் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்அட்டாளைச்சேனை ரூ சடோ அமைப்பினால் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம் இன்று (06) அந்நூர் மகா வித்தியாலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வரை நடைபவணியாக சென்றடைந்தது. 

அக்/அந்நூர் மகா வித்தியால மாணவர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் பெருமளவிலான இளைஞர்களும் பங்குகொண்டு இந்நிகழ்வுக்கு ஆதரவு நல்கியிருந்தனர். மேற்படி புகைத்தல் எதிர்ப்பு நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பிரதேச செயலக சமூக சீர்திருத்த உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் ஆகியோருடன் பிரதேச சுகாதார சேவைகள் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், அக்கரைப்பற்று நீதிமன்ற சமூக நன்னநடத்தை உத்தியோகத்தர், ஒய்வு பெற்ற சமூக சேவகரும், கோணவத்தை ஜூம்ஆ பள்ளிவசால் தலைவருமான எஸ்.எம்.அமீன் உட்பட ரூ சடோ தன்னார்வ தொண்டு நிறுவன அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்திருந்தனர். 

குறித்த நிகழ்வில் “புகைக்கும் பணத்தை கல்விக்கு செலவிடுங்கள்”இ “பீடி, சிகரட் கஞ்சா புகையிலை இல்லாத மண் தேவை”இ “போதை அது சாவின் பாதை” இ“கடனாளியாக்கும் சிகரட் போதை வேண்டாம்” போன்ற பாதாகைகளை காட்சிப்படுத்தயவாறும், கோஷங்களுடனும் மாணவர்கள் நடைபவணியாக சென்றனர். 

புகைத்தல் எதிர்ப்பு நிகழ்வை பொதுமைப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமான “போதையற்ற சமூகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்” என்கிற வாசகம் பொருந்திய ஸ்டிகர்கள் அறிமுகம் செய்து வாகனங்கள், கடைத்தொகுதிகளில் ஒட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

-றிசாத் ஏ காதர்

No comments:

Post a Comment