
வங்கியொன்றின் ATM இயந்திரத்துக்கான 2 கோடி ரூபா பணம் கொண்டு செல்லப்பட்ட வேன் ஒன்று நேற்றிரவு புலத்சிங்கள பகுதியில் மடக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாரதி, உட்பட பணியாளர்கள் மீது மிளகாய்ததூள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, பாதுகாப்பு ஊழியர் சம்பவத்தின் போது தனது ஆயுதத்தைக் கை விட்டு கொள்ளையர்களுக்கு வழி விட்டதாக தெரிவிக்கப்படுவதன் பின்னணியில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பணம் நிரப்பிய 12 பைகள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment