
இந்தோனேசியாவில் சுற்றுலா பிரதேசமான லம்பொக் தீவு பகுதியில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவு நில நடுக்கத்தினால் இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பல நூறு பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரப்படி ஞாயிறு அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment