ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் - sonakar.com

Post Top Ad

Sunday 22 July 2018

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது வருடாந்த பொதுக் கூட்டம்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது  வருடாந்த பொதுக் கூட்டம்   சனிக்கிழமை (21) காலை 9.00 மணியளவில்  அரசாங்க தகவல் திணைக்கள  புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகவும் நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்கா ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர் சமூக விஞ்ஞான அறிவியல் அறிஞரும் எழுத்தாளருமான புரவலர் எம். ஜே. முஹம்மத் இக்பால் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.



பொதுக்கூட்டத்தின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றதுடன்  மேற்படி நிர்வாக ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் பொதுச் செயலாளராக என்.ஏ. எம். ஸாதிக் ஷிஹான் பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் மூன்று மேற்படி பதவிகளுக்கும் போட்டிகள் இன்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment