
இந்திய வர்த்தகரிடம் லஞ்சப் பேரம் நடாத்தி 2 கோடி ரூபா முற்பணம் பெற்ற வேளையில் முன்னாள் அரச மரக்கூட்டுத்தாபன தலைவர் திசாநாயக்க கைதான நிலையில் இடையில் சில நாட்கள் அப்பதவிக்கு நியமனம் பெற்ற பொல்கம்பொலவும் பிறிதொரு லஞ்ச ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரயில்வே திணைக்களத்தில் இடம்பெற்ற 8 மில்லியன் ரூபா ஊழல் தொடர்பிலேயே இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சில நாட்களிலேயே குறித்த நபர் பதவி நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment