
கண்டி வன்முறையின் சூத்திரதாரிகளுள் ஒருவர் என நம்பப்படும் மஹிந்த அணியைச் சேர்ந்த நா.உ திலும் அமுனுகமவிடம் நேற்றைய தினம் 12 மணி நேரம் விசாரணை நடாத்திய பொலிசார் அவரது கைத்தொலைபேசியை தம் வசப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி மாவட்டத்தின் பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிட்ட இன வன்முறைகளின் பின்னணியில் திலும் மற்றும் லொஹான் தொடர்புபட்டிருப்பதாக அரச உயர் மட்டம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், திலும் அமுனுகம விசாரிக்கப்பட்டுள்ள அதேவேளை, சம்பவ தினத்தன்று அரசியல்வாதிகள் கைதாவதைத் தவிர்க்க பொலிஸ் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment