பதுளை: சிறுவனின் கையை வெட்ட வைத்த குற்றச்சாட்டில் முஸ்லிம் வர்த்தகர் கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 May 2018

பதுளை: சிறுவனின் கையை வெட்ட வைத்த குற்றச்சாட்டில் முஸ்லிம் வர்த்தகர் கைது!


பதுளை நகரில் தனது வியாபார நிலையத்தில் விளையாட்டுப் பொருள் ஒன்றைத் திருடிய 13 வயது சிறுவனைப் பிடித்து வைத்து கையை வெட்டிக்கொள்ள வைத்த குற்றச்சாட்டில் நகரின் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.



13 வயது சிறுவன் ஒருவனுக்கே இவ்வாறு குறித்த நபர் கத்தியைக் கொடுத்து கையை வெட்டிக் கொள்ளச் சொன்னதாக பெற்றோர் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

எனினும் கடந்த 19ம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த சம்பவத்தில் சிறுவனை வைத்தியசாலையில் சேர்த்து விட்ட வர்த்தகர், சிறுவனே கையை வெட்டிக்கொண்டதாக பொலிசில் முறைப்பாடும் செய்துள்ளார். இந்நிலையிலேயே பெற்றோரின் குற்றச்சாட்டையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment