2.5 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் மாலைதீவு பிரஜை கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 May 2018

2.5 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் மாலைதீவு பிரஜை கைது!


சுமார் 2.5 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாலைதீவு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



குறித்த நபர் இவ்வாறு பெருந்தொகை போதைப்பொருளுடன் நாட்டை விட்டு வெளியெறுவதாகக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டதாகவும் அதன் பின்னணியில் 33 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யுத்த நிறைவின் பின் ஆசியாவின் முக்கிய போதைப் பொருள் வர்த்தக கேந்திர நிலையமாக இலங்கை மாறியுள்ளதாக கடந்த வருடம் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment