மஹிந்த ராஜபக்சவை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் மங்கள! - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 May 2018

மஹிந்த ராஜபக்சவை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கும் மங்கள!


தேசிய கடன் சுமை பற்றி ஒளிந்திருந்து பேசிக்கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ச அது தொடர்பில் பகிரங்க விவாதமொன்றுக்கு வர வேண்டும் என சவால் விடுத்துள்ளார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.


மஹிந்த ராஜபக்ச அரசு உருவாக்கி வைத்த கடன்சுமையையே கூட்டாட்சி அடைத்து வருவதாக தெரிவிக்கிறது. எனினும், கடனையடைப்பதாகக் கூறி மேலும் பல பில்லியன்கள் கடன் சுமையை கூட்டாட்சி உருவாக்கி வைத்திருப்பதாக மஹிந்த தரப்பு தெரிவிக்கிறது.

இந்நிலையில், நாடு அபிவிருத்தி கண்டு வருவதாகவும் கடன்  சுமை குறைவதாகவும் தெரிவிக்கின்ற மங்கள, புதிதாக 49,000 பேர் வரி செலுத்த ஆரம்பித்திருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். இதெவேளை மஹிந்த ராஜபக்ச இது தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்க முன் வருவாரா எனவும் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment