
எரிபொருள் விலையுயர்வை மையமாகக் கொண்டு பேருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கு விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சரவை 6.5 வீத அதிகரிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், 10 - 20 வீத அதிகரிப்பு அவசியப்படுவதாக தெரிவித்துள்ள பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவதாக தெரிவித்துள்ளன.
ஆகக்குறைந்த கட்டணத்தையும் 10 ரூபாவிலிருந்து 15 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அதனை அதிகரிக்க அமைச்சரவை மறுத்துள்ள நிலையில் இப்போராட்ட அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment