
அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க ஸ்தாபக தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான தேசமான்ய எஸ்.பி. தாசிம் நேற்றைய தினம் கனடாவில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதானியாகவும் நான்கு தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலமாக சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்த அவர் மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ ஜனாசா நலன்புரி சங்கத்தையும் ஸ்தாபித்ததோடு 1977ல் வை.எம்.எம்.ஏ அமைப்பினை பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகவும் மாற்றியிருந்தார்.
மலே சமூகத்தில் முதலாவது தேசமான்ய பட்டத்தைப் பெற்று முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளைப் புரிந்த அன்னாரது நற்காரியங்களை இறைவன் ஏற்றுக்கொள்வானாக.
No comments:
Post a Comment