
உலகின் மிகப்பெரிய விமானம் என கருதப்படும் விமானம் (Antonov An-225 Mriya) இன்று காலை மத்தளயில் தரையிறக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு வந்த குறித்த சரக்கு விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியமை பெருமையளிப்பதாக விமான நிலைய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
640 தொன் எடையைத் தாங்கிச் செல்லக்கூடிய வகையில் 1980 காலப்பகுதியில் சோவியத் ரஷ்யாவில் குறித்த விமானம் வடிவமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment