
File photo
சீதுவ பகுதியில் இயங்கும் தனியார் வங்கியொன்றில் ஹெல்மட் கொள்ளையர்கள் துணிகரமாக கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் அடிக்கடி இவ்வாறு நிகழ்ந்து வந்த நிலையில் இரு ஹெல்மட் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டிருந்ததன் பின் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் தணிந்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் பறிபோன பணம் தொடர்பில் வங்கியின் தகவலுக்காக காத்திருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment