
மாவனல்லை சாஹிரா அமீரக கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் வெஸ்டேர்ன் பிரிமியர் ஹோட்டலில் தலைவர் பாயிஸ் ஹாஷிம் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அமீரக கிளையின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் 2018ஃ19 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவும் நடைபெற்றது.
இதனடிப்படையில் நடப்பாண்டுக்கான தலைவராக ரிப்கான் ரவுப் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதித் தலைவராக அக்ரம் அப்பாசும் செயலாளராக ரிஸ்வான் ரவுபும் பொருளாளராக ஷகீல் பரீதும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய உறுப்பினர் விபரங்களை படத்தில் காணலாம்.
-R.Rauf
-R.Rauf
No comments:
Post a Comment