சுற்றுலா விசாவில் வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியர் கைது! - sonakar.com

Post Top Ad

Sunday, 15 April 2018

சுற்றுலா விசாவில் வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியர் கைது!


சுற்றுலா விசாவில் இலங்கைக்குள் வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னணியில் இந்திய பிரஜையொருவர் கொழும்பு, மட்டக்குளிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.



52 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை விசா விதி மீறல்கள் பின்னணியில் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவ்வப்போது சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வெளிநாட்டவர்களை பொலிசார் கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment