
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் அடிப்படையில் அரசுக்கு தொடர்ந்தும் ஸ்ரீலசுகட்சி உறுப்பினர்கள் இயங்கப் போவதாக தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர.
குரூப் 16 விலகிச் செல்வதைத் தவிர்க்க தான் முடியுமானவரை முயன்ற போதிலும் ஒரு சிலர் தீவிரமாக செயற்பட்டதனால் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதியைப் பொறுத்தவரை அவர் கூட்டாட்சியைக் கைவிடும் நிலைப்பாட்டில் இல்லையென்பதால் அதற்குத் தாம் ஆதரவளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குரூப் 16ன் உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment