பிரதி சபாநாயகர் பதவியை தமதாக்கிக் கொள்ள ஐ.தே.க முயற்சி - sonakar.com

Post Top Ad

Tuesday 17 April 2018

பிரதி சபாநாயகர் பதவியை தமதாக்கிக் கொள்ள ஐ.தே.க முயற்சி


கடந்த காலத்தில் ஸ்ரீலசுகட்சிக்கு வழங்கப்பட்டிருந்த பிரதி சபாநாயகர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சி வசம் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக ஐ.தே.க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.திலங்க சுமதிபால நடுநிலை தவறிய நிலையில் பல சந்தர்ப்பங்களில் பக்கசார்புடன் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து வாக்களித்ததன் பின்னணியில் திலங்க தற்போது பதவி விலகியுள்ளார்.

இதன் பின்னணியில் குறித்த பதவியைத் தமது கட்சி சார்பில் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஐ.தே.க இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment