அரசியல் நிலவரம்; மகாநாயக்கர்களுக்கு விளக்கமளிக்கிறார் ரணில்! - sonakar.com

Post Top Ad

Tuesday 17 April 2018

அரசியல் நிலவரம்; மகாநாயக்கர்களுக்கு விளக்கமளிக்கிறார் ரணில்!


நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம் தொடர்பாக அஸ்கிரிய, மல்வத்த உட்பட முக்கிய பௌத்த சமயத் தலைமைகளுக்கு விளக்கமளிப்பதற்கான விசேட நிகழ்வொன்று நாளை இடம்பெறவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.


நிகழ்வில் கலந்து கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பௌத்த பீடத்துக்கு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் புதிய முன்னெடுப்புகள் குறித்து முழுமையான விளக்கமளிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, 23ம் திகதிக்குள் புதிய அமைச்சரவை நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment