
குவைத்தில் ஹிஜாப் அணிவதை ஊக்குவித்து வீதியோரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாதைகளை எதிர்த்து அந்நாட்டின் ஒரேயொரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரான சபா அல் ஹஷம் கருத்து வெளியிட்டுள்ளமை அங்கு சர்ச்சை உருவாகியுள்ளது.
இவ்வாறான விளம்பரங்களை விட நாட்டின் ஐக்கியத்தை ஊக்குவிக்கும் பதாதைகளை காட்சிப்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளமை ஹிஜாப் அணிவதற்கு எதிரான அவரது நிலைப்பாடென சித்தரிக்கப்படுகிறது.
குவைத் போன்ற சிவில் சமூகம் உள்ள நாட்டில் இவ்வாறான விளம்பரங்கள் அவசியமற்றது என குறித்த பெண்மணி மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment