
பெண் எழுத்தாளர் ஷாமிளா ஷரீபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' எனும் நூல் வெளியீடு எதிர்வரும் ஞாயிறு 22ம் திகதி மாலை 4.மணிக்கு கொழும்பு -10 அல் ஹிதாயா மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
ஆய்வுப்பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவருக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட கல்வியியலாய்வில் குறுகியகால பயிற்சி நெறி கிடைக்க ப்பெற்று, அதனைப் பூர்த்தி செய்து இப்போது செய்யுள் இலக்கியம் தொடர்பான செயல்வழி ஆய்விலும் போர் இலக்கியம் தொடர்பான இலக்கிய ஆய்விலும் இவரது பணி தொடர்கிறது.
ஏலவே 'நிலவின் கீறல்கள்' எனும் கவிதைத் தொகுதியை வெளியிட்டிருந்த ஷாமிளாவின் இரண்டாவது படைப்பே 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நூலாகும்.
ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.
-சிமாரா அலி
No comments:
Post a Comment