இந்தியா: மேலும் ஒரு 11 வயது சிறுமியின் சடலம் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Saturday 14 April 2018

இந்தியா: மேலும் ஒரு 11 வயது சிறுமியின் சடலம் மீட்பு!


கஷ்மீரில் 8 வயது குழந்தை ஆஷிபா வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொந்தளிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் சூரத் பகுதியில் 11 வயது குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.மர்மஸ்தானம் உட்பட 86 இடங்களில் காயங்களுடன் காணப்பட்டுள்ள குறித்த சிறுமியின் அடையாளம் குறித்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை குறித்த சம்பவம் வேறு இடத்தில் இடம்பெற்றிருக்கலாம் எனவும் உடலம் சூரத் (குஜராத்) பகுதியில் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மோடி ஆட்சியில் பாலியன் வன்கொடுமைகளையும் இந்துத்வா கோசம் கொண்டு மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment