
சிறைச்சாலைகளுக்குள் குறிப்பாக மரண தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு தமது உறவினர்களுடன் உரையாட கைத் தொலைபேசிகளைக் கொண்டு செல்லும் வியாபாரம் ஒன்று நடைபெற்று வருவது குறித்து போகம்பர சிறைச்சாலை நிர்வாகம் கண்டறிந்துள்ளது.
புலனாய்வுத்துறை அதிகாரியொருவருடன் இணைந்து அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் நபர் ஒருவர் ஊடாக இவ்வாறு கைத்தொலைபேசிகள் உள்ளெடுத்துச் செல்லப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த ஊழியருக்கு இதற்கு 5000 ரூபா சன்மானம் வழங்கப்பட்டு வருவதாகவும் குறித்த நபரை விசாரித்ததில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment