மஹிந்த அணியுடன் இணைந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் குரூப் 16 உறுப்பினகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் துமிந்த திசாநாயக்க ஆகியோரைப் பதவி நீக்கும் படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமது தரப்பு இன்னும் மௌனம் காப்பதாகவும் அடுத்த வாரம் முதல் பதிலடி கொடுக்க ஆரம்பிக்கும் போது குரூப் 16ன் கொந்தராத்து விபரங்கள் வெளி வரும் எனவும் தெரிவித்துள்ளார் மஹிந்த அமரவீர.
இந்நிலையில் ஜனாதிபதி நாடு திரும்பியதும் குரூப் 16 தொடர்பிலான விசாரணை அறிக்கையும் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment