திரும்பவும் கராச்சியில் தரையிறங்கிய அன்டனோவ்; பாக். சந்தேகம்! - sonakar.com

Post Top Ad

Sunday 22 April 2018

திரும்பவும் கராச்சியில் தரையிறங்கிய அன்டனோவ்; பாக். சந்தேகம்!


எரிபொருள் போதாமையால் மத்தளயில் தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானமான அன்டனோவ் 225 புறப்பட்டதும் மீண்டும் கராச்சியில் தரையிறங்கி அங்கும் எரிபொருள் நிரப்பியுள்ள நிலையில் இலங்கையில் எதற்காகத் தரையிறக்கப்பட்டது என சந்தேகம் வெளியிட்டுள்ளது பாகிஸ்தான்.


கடந்த 17ம் திகதி மத்தளயில் அவசரமாகத் தரையிறங்கிய குறித்த விமானம் சவுதி அரேபியா செல்லும் வழியில் கராச்சியில் மீண்டும் தரையிறங்கி அங்கு எரிபொருள் நிரப்பியுள்ளதாகவும் இலங்கைக்கும் கராச்சிக்குமிடையிலான பயண காலத்தில் எரிபொருள் தீரப் போவதில்லையென்பதால் இலங்கையில் 3 நாட்கள் தங்கியிருந்ததன் காரணம் என்னவெனவும் பாகிஸ்தான் கேள்வியெழுப்பியுள்ளது.

640 தொன் எடையைக் காவிச் செல்லும் சரக்கு விமானமான அன்டனோவ் 225 மத்தளயில் தரையிறக்கப்பட்டமை தற்செயலானது என தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment