
நாடாளுமன்றம் ஜனாதிபதியின் அதிகாரத்துக்குட்பட்ட வகையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர கலைக்கும் எண்ணம் எதுவும் ஜனாதிபதிக்கு இல்லையென தெளிவுபடுத்தியுள்ளார் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ.
மே 8ம் திகதியே அடுத்த தவணை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி திட்டமிடுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் குறித்தே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
அடுத்த தவணை ஆரம்பமாகும் வரை மனுத் தாக்கல் எதுவும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment