
மீண்டும் வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் மீண்டும் ஆரம்பித்து விட்டது எனவும் இம்முறை உக்கிரமான பழியுணர்வோடு பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளார் ஐ.நா செயலாளர் அன்டனியோ கட்டரஸ்.
உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா - ரஷ்யா ஆரம்பமான பனிப்போர் பல காலங்களாக உலகை அச்சுறுத்தி வந்த நிலையில் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் தவிர்ப்பதற்கான பொறிமுறைகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ள நிலையில் மீண்டும் பனிப் போர் உருவாகியுள்ளதாக கட்டரஸ் மேலும் விளக்கமளித்துள்ளார்.
சிரியா மீதான தாக்குதல்களின் பின்னணியில் ரஷ்யாவுடனான மேற்குலகின் பழி தீர்ப்பே காரணியாக இருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment