
அரசாங்கத்துடன் இருந்து கொண்டு அரசின் நடவடிக்கைகளுக்குப் பாதகமாக நடந்து கொண்ட கட்சி தாவும் பட்சிகள் விலகிய சந்தோசத்திலேயே நாடு முழுவதும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சி நா.உ நலின் பண்டார.
பிரதமருக்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அரசை விட்டு விலகியுள்ளமை குறித்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், தற்போது அரசை மேலும் வலுவூட்டி முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய அமைச்சரவையிலும் சு.க - ஐ.தே.க கூட்டு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment