
முஸ்லிம்கள் பாதுகாப்பு படைகளில் சேர்வதில் கடும் தயக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நிமித்தம் லண்டன் சென்றுள்ள அவர் நேற்றைய தினம் அங்கு வாழும் இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது, முஸ்லிம் சமூகத்திடம் அவர் காணும் குறைகள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக நிகழ்வில் கலந்து கொண்ட சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் இர்பான் இக்பால் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் ஏலவே இராணுவத்தில் பணியாற்றிய ஒருவரும் பல தடவைகள் பொலிசில் சேர்வதற்கு விண்ணப்பித்தும் இடம் தரப்படாத ஒருவரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தததோடு தமது அனுபவத்தையும் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
எனினும் தானே இப்போது ஜனாதிபதியாக இருப்பதாகவும் தற்போது முஸ்லிம்கள் விண்ணப்பித்தால் இணைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment