
சிரியா மீதான மேற்கு நாடுகளின் தாக்குதலை துருக்கி வரவேற்றுள்ள அதேவேளை ஈரான் இதனை அத்துமீறிய 'குற்றம்' என வர்ணித்துள்ளது.
தாக்குதல் தொடர்பில் விளக்கமளித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், சிரிய அரசு இரசாயன ஆயுதங்கள் உபயோகிப்பதை நிறுத்தும் வரை தாக்குதல் நடாத்தப்படும் என தெரிவித்துள்ள அதேவேளை அவ்வரசுக்கு முட்டுக் கொடுக்கும் ரஷ்யாவும் ஈரானும் அசாதின் அரக்கத் தனத்துக்கு துணை போவதாக தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் எங்காவது யுத்தத்தை ஆரம்பிக்கும் வழக்கத்தைத் தொடர்ந்துள்ள ட்ரம்ப், வட கொரியாவுடன் யுத்தமொன்றை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மறைமுகமாக ரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment