மத நல்லிணக்கத்துக்கு நான் மட்டும் பலியாடா? - sonakar.com

Post Top Ad

Tuesday 27 March 2018

மத நல்லிணக்கத்துக்கு நான் மட்டும் பலியாடா?என்னுடைய மதத்தை நீ பின்பற்று உன்னுடைய மதத்தை நான் பின் பற்றுவேன் என்பதற்கும் . என்னுடைய மதத்தை நீ மதி உன்னுடைய மதத்தை நான் மதிப்பேன் என்பதற்கும் அர்த்தம் தெறிந்த ஒருவன் மட்டும்தான் மதநல்லினக்கம் பற்றி பேச முடியும்.

முதலில் மத வெறியனும் , மத நல்லிணக்க விரும்பியும், மத எதிரியும் விளங்க வேண்டிய முக்கிய விடயம் ஒன்று இருக்கிறது. உன்னுடைய மதத்தை விட என்னுடைய மதத்தை நான் சிறந்தது என்று எண்ணுகிறேன், அதனால்தான் எனது மதத்தின் படி பெயர் வைத்துள்ளேன், எனது மதத்தின் படி வாழ்கிறேன், எனது மதத்தின் படி வணங்குகிறேன் என்பது ஒவ்வொருவருவரதும் எண்ணமுமாக இருக்கிறது. இதை  நீங்கள் ஒத்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை. 

உன்னுடைய மதத்தை விட என்னுடைய மதம் சிறந்தது என்று நீ ஏற்றிருந்தால் எப்போதோ என் மதம் பக்கம் நீ வந்திருப்பாய் . ஆகவே நீ மூடி மறைக்க எதுவுமில்லை. உன்னுடைய மதத்தையே நீ உயர்வாக நினைத்துக் கொண்டுள்ளாய். 

இப்போது விடயத்துக்கு வருவோம். என்னுடைய மதத்தில் எது உனக்கு பிடிக்கவில்லை என்று கேட்டால் உதாரனத்துக்கு நான்கு திருமன சட்டம் பிடிக்கவில்லை என்பாய். ஆகவே நீ விரும்புவது உன்மத கோட்பாட்டின் படி அல்லது உன்மன கோட்பாட்டின்படி நாங்கள் உயர்வாக நினைத்த எங்கள் மத கோட்பாட்டை விட்டும் வெளியே வந்து உன் கோட்பாடான ஒரு திருமனம்தான் என்ற கருத்தை ஏற்க வேண்டும் என்கிறாய். அப்படி நாங்கள் ஏற்றால் அதற்கு பெயர் நீ வைப்பது மத நல்லினக்கம். அதாவது என் மதத்தை விட்டும் உன் மதம் அல்லது உன் மனம் சொல்வது போல நாம் நடக்க வேண்டும் என்பதுவே உனக்கு மத நல்லினக்கம். 

இதையே நாம் பல கடவுள் பொய் ஒரு கடவுளை வணங்கு. அந்த ஒரு கடவுளுக்கு மனைவி மக்கள் இல்லை இருப்பவன் கடவுளாக இருக்க முடியாது கல்லை கடவுளாக எண்ணி கல்லை வணங்கி அடிமையாகாதே  என்று சொல்கிறது என் மதம். ஆனால் உன் மதம் அதற்கு எதிராக போதிக்கிறது இப்போது நான் அந்த ஒரு கடவுளை மட்டும் வணங்கு என்று உன்னை கூறினால் அதற்கு நீ வைக்கும் பெயர் மதவெறி அல்லது மத மாற்றம். 

ஆகவே என் மதத்தை நான் பின்பற்றாது உன் விருப்பப்படி நாம் இருந்தால் அதற்கு பெயர் மத நல்லினக்கம் . என் மதத்தை நான் பிற்றி என் மதப்படி வாழ்ந்தால் அதற்கு பெயர் கடும்போக்கு வாதமா? இது எந்த ஊரில் உள்ள நியாயம்!?

இல்லை ,இல்லை இரண்டு மதத்திலும் உள்ள நல்லதை மட்டும் எடுத்து நடப்போம் அதுதான் மத நல்லினக்கம் என்று சொல்வாயானால் அது வெறும் பொய்ப் பேச்சு மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் ஒரு விலங்கு போல. 

உன் மதத்தில் நீ பிழை உண்டு என்றால் உன் மதத்தில் நீ இருக்கவே தகுதியில்லை. உன் மதம் பிழை என்றால் உன் மதக் கோட்பாட்டை ஏற்படுத்தி தந்த உன் கடவுள் மீதே நீ குறை காண்கிறாய் என்று பொருள். ஆகவே, ஒன்று நீ நாத்திகனாக இருக்க வேண்டும் அல்லது உன் மதத்தின் மீதே உனக்கு பற்றில்லாமல் இருக்க வேண்டும். 

ஆம் , நான் நாத்திகன் என்று நீ சொன்னால் அடிப்படையிலேயே என் மதத்தையும் என் கடவுளையும் மறுக்கிறாய் எதிர்க்கிறாய் ஆகவே நமக்குள் எப்படி ஒற்றுமை உண்டாகும். நீ கடவுள் இல்லை என்று நம்புகிறாய் , நான் கடவுள் உண்டு என்று நம்புகிறேன். இரு நம்பிக்கையில் உன் நம்பிக்கைதான் சிறந்தது என்று எப்போது உன் பக்கம் என்னை வற்புருத்தினாயோ அந்த நொடியே உனக்கும் எனக்கும் நம்பிக்கை வாதம் அதிகரித்து விடுகிறது. எப்படி உன்னால் நாத்திகம்.பக்கம் அழைக்க முடியுமோ அப்படி என்னாலும் இஸ்லாத்தின் பக்கம் உன்னை அழைக்க முடியும். எனவே நல்லினக்கத்துக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன? 

இல்லை நான் மதத்தில் பற்றில்லாமல் இருப்பவந்தான் என்றால் உன் மதத்தை குறை கண்டால் எதற்கு அந்த மதத்தில் தங்கியுள்ளாய் என்று கேட்பேன்? பற்றில்லாத ஒன்றில் இருந்து பற்றுடன் இருக்கும் எம்மை ஏன் உம் மனம் விரும்பும் வழிக்கு வர வற்புறுத்துகிறீர்கள் என்று கேட்பேன். ஆகவே உம் மனம் விரும்பும் கோட்பாட்டை நாம் ஏற்றால் அது மத நல்லினக்கம் என் போல பல பேர் ஏற்றதை விட்டு வர வேண்டும் என்று சொல்வது உங்களைப் பொருத்த வரை மதவெறியில்லை. 

இல்லை நான் என் மதத்தில் பற்றுள்ளவந்தான் என்றால் உன் மதத்தையும் உன் மதக் கோட்பாட்டையும் முழுதாக ஏற்கிறாய் என்று பொருள். உனக்கு எப்படி உன் மதத்தையும் உன் மத கோட்பாட்டையும் பின்பற்ற உரிமை உள்ளதோ அது போன்று எனக்கும் அந்த உரிமை உண்டு. உன் உரிமையில் நான் குறிக்கிட்டால் அது குற்றம் என்றால் என் உரிமையில் நீ குறிக்கிட்டாலும் குற்றம்தான். 

ஆகவே எவனுக்கு தன் ஆசைப்படி நீ இருக்க வேண்டும் என்று கூற முடியாது. அப்படி கூறினால் அங்கே உருவாகுவது மத நல்லினக்கம் அல்ல. மதக்கலவரம்.என்னுடைய மதக் கோட்பாட்டை நீ பின்பற்றுவதும் பின்பற்றாததும் உன் இஷ்ட்டம். நான் உன்னுடைய மதத்தை பின்பற்றுவது போல நீயும் என்னுடைய மதத்தை பின்பற்று என்பது மகா முட்டாள் தனம். 

என்னுடைய மதத்தில் சில விடயங்கள் பிடித்ததனாலேயே அதை பின்பற்றினாய். ஆனால் என்னுடைய மதம் சொல்லும் ஓரிரை கொள்கை பின்பற்றாததானாலேயே அதை விட்டும் ஒதுங்கி கொண்டாய். அது போல எனக்கும் உன்னுடைய மதத்தில் உள்ள கோட்பாடு பிடிக்கவில்லை என்று நாம் ஒதுங்கி கொண்டாள் அதில் என்ன தவறு. 

ஆகவே அறிவுள்ள எவனும் மதத்தை விட்டுக் கொடுப்பதுதான் மதநல்லினக்கம் என்று நினைக்க மாட்டான். அவன் மதத்தை அவன் பின்பற்றட்டும் என்று விட்டுக் கொடுப்பதுதான் மத நல்லினக்கமாக நினைப்பான். இஸ்லாம் மத நல்லிணக்கத்தை சுருக்கமாக சொல்லி விட்டது

"உனக்கு உன்னுடைய மார்க்கம்"
"எனக்கு என்னுடைய மார்க்கம்"
(அல்குர்ஆன்)

S.சிப்ராஜ் (மதீனா)

No comments:

Post a Comment