
அரசின் இயலாமையால் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாக தெரிவிக்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.
நாளுக்கு நாள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்றும் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர், உடனடியாக இவை கட்டுப்படுத்தப்படா விட்டால் கொலைக் கலாச்சாரம் மேலோங்கிச் செல்லும் எனவும் எச்சரித்துள்ளார்.
முன்னர் வெள்ளை வேன் குற்றச்சாட்டு நிலவியது போன்று இந்த அரசு மோட்டார் சைக்கிள் கொலைக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment