
ஐக்கிய இராச்சியத்தினைத் தொடர்ந்து அமெரிக்காவும் ரஷ்ய ராஜதந்திரிகள் பலரைத் தமது நாட்டை விட்டு வெளியேறப் பணித்துள்ளது.
புட்டின் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ள நிலையில் மேற்குலக நாடுகள் பாரிய அழுத்தத்தைப் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளன.
இதன் பின்னணியில் ஐக்கிய இராச்சியம், அமெரிக்காவுடன் பல ஐரோப்பிய நாடுகளும் இணைந்து இவ்வாறு ராஜதந்திரிகளை வெளியேறப் பணித்துள்ளன. இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் சுமர் 21 நாடுகளிலிருந்து 100 ராஜதந்திரிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment