
சியம்பலாண்டுவ, தும்பகஹவெல பகுதியில் முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் இனவாதிகளின் அச்சுறுத்திலினால் கடந்த வாரம் பூட்டப்பட்டமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்ற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அப்பகுதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும், பூட்டப்பட்ட கடைகள் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:.
நாட்டின் முஸ்லிம்களின் பாதுகாப்பு நிலை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், டி.எம்.சுவாமிநாதன், தயா கமகே, இராஜாங்க அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், புலனாய்வுப் பிரிவு, மதிப்பீட்டு திணைக்களம் மற்றும் புனர்வாழ்வு அதிகார சபை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, நாட்டின் சமகால நிலைவரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சியம்பலாண்டுவ, தும்பகஹவெல பகுதியில் இடம்பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றதோடு அங்குள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினார்.
-R.Hassan
No comments:
Post a Comment