
இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் செயலாளரது வீட்டின் மீது இன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
அத்துருகிரிய, ஜோதிபால மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வீட்டின் ஜன்னல் மற்றும் சுவர்ப்பகுதி சேதமடைந்துள்ளது.
இன்று காலை அத்துருகிரியவில் இடம்பெற்ற சம்பவமே இதுவெனவும் இதன் போது ரி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment