ரணிலின் பதவிக்கு ஆபத்தில்லை: சோதிடர் விஜேமுனி - sonakar.com

Post Top Ad

Sunday, 25 March 2018

ரணிலின் பதவிக்கு ஆபத்தில்லை: சோதிடர் விஜேமுனி
ஜனாதிபதி மரணிக்கப் போகும் திகதியை 'கணித்து' வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கிய சோதிடர் விஜேமுனி, நம்பிக்கையில்லா பிரேரணையால் ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்கு எவ்வித ஆபத்தும் இல்லையென தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்சவின் கட்சியூடாக அரசியலில் கால் பதிக்க எடுத்த முயற்சி பலனற்றுப் போன நிலையில் தொடர்ந்தும் தனது சோதிடம் பார்க்கும் தொழிலை செய்து வரும் விஜேமுனி, நம்பிக்கையில்லா பிரேரணையை ரணில் மிக இலகுவாக வென்று விடுவார் என தெரிவித்துள்ளார்.


நூற்றுக்கு அதிகமான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ரணிலை ஆதரித்துள்ள அதேவேளை பெரும்பான்மை ஆதரவை நாடாளுமன்றில் நியமிப்பது இலகுவான வேலையென ஏலவே ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment