மீளத் திறந்து வைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு விமான நிலையம் - sonakar.com

Post Top Ad

Sunday, 25 March 2018

மீளத் திறந்து வைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு விமான நிலையம்


மட்டக்களப்பு விமான நிலையம் பொது மக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலவே 2016ல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டிருந்த போதிலும், சர்வதேச விதிமுறைகளுக்கிணங்க அனுமதியைப் பெறுவதில் தாமதம் நிலவியது.


இந்நிலையில், தற்போது மீண்டும் அமைச்சர் நிமல் சிறிபால டிசிவ்வாவினால் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் 1400 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடம் உருவாக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, உள்நாட்டு விமானப் போக்குவரத்தினை அபிவிருத்தி செய்ய மேலும் பல விமான நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment