
மிக் விமானக் கொள்வனவு ஊழல் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதர் உதயங்க வீரதுங்க டுபாய் விமான நிலையத்தில் 'மீண்டும்' கைது செய்யப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த தடவை கைதான போதிலும் அவருக்கு எதிரான பிடியாணை இல்லாத நிலையில் இலங்கைக்குக் கொண்டு வர இயலாத நிலை காணப்பட்டது. எனினும், அதன் பின் இன்டர்போல் ஊடான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச ஊடக்கள் இத்தகவலை வெளியிட்டுள்ள அதேவேளை குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வரும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment