
தேடப்பட்டு வரும் முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதர் உதயங்க வீரதுங்க டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டிருந்த நிலையில் அதன் உண்மைத்தன்மை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
பிடியாணை இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட உதயங்கவுக்கு எதிராக தற்போது சர்வதேச பிடியாணை பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் டுபாயில் தங்கியிருந்த உதயங்க நாட்டை விட்டு வெளியேற முயன்ற நிலையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக முன்னர் அரச ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அவ்வாறு தாம் யாருக்கும் எந்தத் தகவலும் வழங்கவில்லையென தற்போது நிதிமோசடி விசாரணைப் பிரிவினரை ஆதாரம் காட்டி தனியார் செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இக்கைது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு முழுமையான தகவல் இன்னும் கிடைக்கவில்லையென சிங்கள வானொலியொன்றுக்கு பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உதயங்க கைது மர்மம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment