ஜுன் 5 Penumbral கிரகணம்: ஒரு பார்வை - sonakar.com

Post Top Ad

Wednesday 3 June 2020

ஜுன் 5 Penumbral கிரகணம்: ஒரு பார்வை


கிரகணம்: சூரியனையும் சந்திரனையும் பூச்சி விழுங்குது... பார்க்காதேனு மூத்தவங்க பயங்காட்டிய காலம் போய்,  விந்தையான ஞானம் = விஞ்ஞானத்தை அலசி ஆராயும் காலமிது.

ஜுன் 5ம் திகதி இலங்கை நேரம் இரவு 11.15 அளவில்...  Penumbral lunar eclipse இடம்பெறப் போகிறது. இன்ஷா அல்லாஹ்.. 6ம் திகதி அதிகாலை 2.34 வரை நீடிக்கும் என கணிக்கப்படுகிறது.

வானியல் விஞ்ஞானம்,  வான் வெளியில்... நிழலை மூன்று வகையாக பிரிக்கிறது... Umbra, penumbra மற்றும் antumbra என அவற்றிற்குப் பெயர். 

Umbra என்றால் கரு நிழல், Penumbra என்றால் ஒளி முழுமையாகத் தடுக்கப்படாத கரு நிழலின் வெளிப்பகுதி ... அதே போன்று Antumbra என்றால் கரு நிழலின் முடிவுப் பகுதி என்று கொள்வது இலகுவான புரிதலுக்கு உதவும்.

அந்த வகையில் பூமியினால் உருவாகும் கரு நிழலின் Penumbra பகுதிக்குள் முழு நிலவு காட்சியளிக்கும் அடிப்படையில்  ஜுன் 5 கிரகணம் Penumbral lunar eclipse என அறியப்படுகிறது.

மொத்தத்தில்.... சூரியன் - பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர் கோட்டில் வரும் போது,  சூரிய ஒளியால் ஏற்படும் புவியின் கரு நிழல் பகுதிக்குள் சந்திரன் நுழைவதே கிரகணம் என்றாகிறது.

அந்தக் காலத்து மூத்தவங்க இந்த கரு நிழற்பகுதிகளையே பூச்சி என்றழைத்தார்கள்.

இடையில எத்தனை பௌர்ணமி  சொன்ன தேதியில் வந்தாலும் ... இன்னும் பல வருடங்களுக்கு பெருநாள் பிறைச் சண்டை ஓயப் போவதில்லை. 

இருந்தாலும்... அறிந்து கொள்வோம்!

- Irfan Iqbal (Sonakar.com)

No comments:

Post a Comment