அக்குரணயில் பாதிக்கப்பட்டவரோடு தொடர்பிலிருந்தவர்களை முன்வருமாறு கோரிக்கை - sonakar.com

Post Top Ad

Friday, 3 April 2020

அக்குரணயில் பாதிக்கப்பட்டவரோடு தொடர்பிலிருந்தவர்களை முன்வருமாறு கோரிக்கை


அக்குரணயில் கொரோனா பாதிப்புக்குள்னான நபரோடு எவ்வகையிலேனும் தொடர்பிலிருந்திருந்தால் குறித்த நபர்களை உடனடியாக சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.தெலம்புகஹவத்தை பகுதியில் கொரோனா பாதிப்புக்குள்ளான நபரோடு எவ்விதத்தில் தொடர்பு வைத்திருந்திருந்தாலும் அது குறித்து அறியத்தருமாறு சுகாதார வைத்திய அதிகாரி சஞ்சீவ குருந்துகஹமட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்பு கொள்ளும் யாரும் அச்சப்படத் தேவையில்லையெனவும் தேவையேற்படின் தகுந்த அறிவுரை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment