தெரணவின் கள்ள மௌனம்; போலி வரைபும் தகர்ந்தது! - sonakar.com

Post Top Ad

Monday 20 April 2020

தெரணவின் கள்ள மௌனம்; போலி வரைபும் தகர்ந்தது!


சிங்கள வானொலியொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தம்பதிவ யாத்திரையிலிருந்து நாடு திரும்பிய பலர் எதுவித பரிசோதனைகளுமின்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தமை கொரோனா பரவியிருந்த ஆரம்ப கட்டத்தில் வெகுவாக கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்தது.



எனினும், அதில் பயணித்து மார்ச் மாதம் 12ம் திகதி நாடு திரும்பிய புதுக்கடை, பண்டாரநாயக்க மாவத்தையில் வசித்து வந்த பெண்ணொருவர் தொற்றுக்குள்ளானமை, ஏப்ரல் மாதம் 15ம் திகதி கண்டறியப்பட்டதையடுத்து அவர் வாழ்ந்த தோட்டப்பகுதியிலிருந்து 17ம் திகதி மேலும் அறுவருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் (19) அங்கு மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்றுள்ளதாக கண்டறியப்பட்டு குறித்த இடத்தில் சுமார் 46 வீடுகளில் வாழ்ந்த, சுமார் 196 பேர் பல பேருந்துகளில் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 24 பேருக்கு தொற்றிருப்பது இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது. எனினும், முஸ்லிம் பகுதிகளிலிருந்து ஆட்கள் கொண்டு செல்லப்பட்டதாக மாத்திரம் சித்தரிக்க முனையும் அத-தெரண, இப்பின்னணி குறித்த முழுத் தகவலையும் மறைத்து வருகிறது. அத்துடன், ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் கொரோனா தொற்று குறைந்து விட்டதாக காட்டுவதற்காக அண்மையில் மக்களைக் குழப்பும் வரைபொன்றையும் தெரண வெளியிட்டிருந்தது. அவ்வரைபில் ஏப்ரல் 14ம் திகதி வரை ஒவ்வொரு ஏழு நாட்களின் கூட்டுத்தொகையை கணித்திருந்த போதிலும் ஏனைய நாட்களில் தொற்றின் தொகையைக் குறைத்துக் காட்டுவதற்காக தனித்தனி தினங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஏப்ரல் 15 முதல் ஆரம்பிக்கும் இறுதி வாரம் 21ம் திகதியே நிறைவுறவுள்ள நிலையில் 20ம் திகதியான இன்று இவ்வாரத்தின் கூட்டுத்தொகை வெகுவாக எகிறியுள்ளதுடன் இதுவரை அதிக தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள வாரமாக மாறியுள்ளது. இத்தனைக்கும் 20ம் திகதி இன்னும் முடிவுறாத நிலையில் கூட்டுத்தொகை 62ஐத் தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த யாத்திரிகர்களை பரிசோதனையின்றி வீடுகளுக்கு அனுப்பியது தொடர்பில் மார்ச் மாதம் 19ம் திகதி தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி தனது செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்த காணொளியைக் கீழ்க்காணலாம்:

No comments:

Post a Comment