ஜாஎல: ஒளிந்திருந்து கைதானவர்களோடு தொடர்புள்ள 52 பேர் முகாமுக்கு! - sonakar.com

Post Top Ad

Sunday, 12 April 2020

ஜாஎல: ஒளிந்திருந்து கைதானவர்களோடு தொடர்புள்ள 52 பேர் முகாமுக்கு!


ஜாஎல பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய வாகன சாரதியொருவரோடு தொடர்பிலிருந்ததன் பின்னணியில் 28 பேருக்கு தனிமைப்படுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும், அவ்வுத்தரவை மீறி நடமாடித் திரிந்த நபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்தோரில் அறுவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து குறித்த நபர்களோடு தொடர்பிருந்து மேலும் 52 பேரை இன்றைய தினம் ஒலுவில் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர் கடற்படையினர்.

ஜாஎல மற்றும் மகேவத்த பகுதிகளிலிருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் இவ்வாறு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment