மார்ச் 27 சொன்ன விடயம் அது: அலி சப்ரி விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 5 April 2020

மார்ச் 27 சொன்ன விடயம் அது: அலி சப்ரி விளக்கம்!

https://www.photojoiner.net/image/2k6cZV8K

இலங்கையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியிருப்பதாக தான் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முப்திக்குத் தெரிவித்திருந்தது மார்ச் மாதம் 27ம் திகதியெனவும் அதன் பின்னர் 31ம் திகதியே புதிய திருத்தம் வெளியிடப்பட்டது எனவும் விளக்கமளித்துள்ளார் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி.இன்றைய தினம் ரிஸ்வி முப்தியின் பழைய ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் இது குறித்து சோனகர்.கொம் அவரிடம் வினவிய போது அவர் இது பற்றி விளக்கியிருந்தார்.

ரிஸ்வி முப்தியின் ஒலிப்பதிவில் திகதி குறிப்பிடப்படாத நிலையில் அது புதிய தகவல் என பகிரப்பட்டு வருகின்ற அதேவேளை மார்ச் மாதம் 31ம் திகதிக்குப் பின் தற்போது ஆகக்குறைந்தது தகனம் செய்யப்பட்ட உடலத்தின் சாம்பலையாவது பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த பழைய ஒலிப்பதிவை பகிர வேண்டாம் என ஜம்மியத்துல் உலமா சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment