20ம் திகதி வரை 'வீட்டிலிருந்தே' வேலை செய்ய உத்தரவு - sonakar.com

Post Top Ad

Monday, 13 April 2020

20ம் திகதி வரை 'வீட்டிலிருந்தே' வேலை செய்ய உத்தரவு


கொரோனா சூழ்நிலையில் தாம் பணி புரியும் நிறுவனங்களுக்கு செல்ல முனையாது வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு விடுக்கப்பட்டிருந்த அறிவித்தலை 20ம் திகதி வரை நீடித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.



பாடசாலைகளை மே 11ம் திகதியும், பல்கலைக்கழகங்களை மே 18ம் திகதியும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் ஆறு மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் உள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் கொரோனா தொற்று அபாயம் தொடர்வதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment